இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு வெறும் 35 பைசாவில் 10 லட்சத்திற்கான காப்பீடு வழங்குகின்றது. ரயில் பயணத்தின் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் ஐ ஆர் சி டி சி பயண காப்பீட்டு கொள்கை என்ற பெயரில் காப்பீடு வழங்கப்படுகிறது. ஆன்லைனில் நல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும். வெளிநாட்டினர் மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இது பொருந்தாது.
பயணிகளின் மரணம் அல்லது நிரந்தர உடல் மூலம் ஏற்பட்டால் பத்து லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படும். பகுதி இயலாமைக்கு 7.50 லட்சம், காயம் ஏற்பட்டால் மருத்துவமனை செலவுக்கு இரண்டு லட்சமும், விபத்தில் பயணிகள் உயிரிழந்தால் உடல் கொண்டு செல்ல பத்தாயிரம் ரூபாயும் வழங்கப்படும். மேலும் தீவிரவாத தாக்குதல்கள், திருட்டு, கொள்ளை, கலவரங்கள், ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணிகள்,ரயில் மோதி விபத்துக்கள் மற்றும் ரயில் தடம் புரண்டது போன்ற ஆபத்துக்களுக்கு இந்த காப்பீடு வழங்கப்படுகிறது.
நாம் விரும்பும் நிறுவனத்திடம் இருந்து காப்பீடு எடுக்கக் கூடாது. ஐ ஆர் சி டி சி தேர்வு செய்த சில நிறுவனங்கள் மட்டுமே இந்த காப்பீட்டு வசதியை வழங்குகின்றன. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது காப்பீட்ட விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். உடனே உங்கள் மொபைலுக்கு மின்னஞ்சல் செய்தி அனுப்பப்படும். அதன் பிறகு நாமினியின் விவரங்களை உள்ளிட ஒரு இணைப்பு அனுப்பப்படும். அதனை ரத்து செய்ய வாய்ப்பில்லை. ஒரே PNRகீழ் செய்யப்படும் அனைத்து முன்பதிவுகளுக்கும் இந்த காப்பீடு பொருந்தும்.