ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் இந்திய ரயில்வே மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் முன்பதிவில்லா ரெயில் பெட்டிககளுக்கான சேவை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்ததால் மார்ச் மாதத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை காண சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு என்றாலும் அது அனைவராலும் முன்பதிவு செய்து பயணித்து விட இயலாது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் ஏற்றதாக இருக்கும். இதில் டிக்கெட் கட்டணம் மிகவும் குறைவு இதனால் நிறைய பேர் அதிகமாக இதில் பயணிக்கின்றனர். முன்பதிவு ரயில் பெட்டிகளில் கூட்டம் எப்போதும் அலைமோதும் வழக்கம். அதேபோல் ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் புக்கிங் செய்ய நிறைய பேருக்கு தெரியாது. முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் இன்று சுலபமாக வாங்கி விட முடிகிறது.
பேருந்து நிலையத்தை இதுவும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் கட்டணம் மிகவும் குறைவு, கழிப்பறை வசதி போன்ற வசதிகள் இருப்பதால் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். முன்பதிவில்லா ரெயில் சேவை தொடங்கி உள்ள நிலையில் தற்போது முதியோருக்கான டிக்கெட் தொகையும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதவிர பான், ஆதார் தொடர்பான சேவையும் இனி ரயில் நிலையங்களிலேயே நமக்குக் கிடைக்கும். இதுமட்டுமல்லாமல் வருமான வரி கணக்கையும் தாக்கல் செய்யலாம். மேலும் இது போன்ற நிறைய வசதிகள் ரயில் பணிகளுக்காக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.