Categories
தேசிய செய்திகள்

“ரயில் பயணிகள் கவனத்திற்கு”…. மத்திய மந்திரி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

எதிர்காலத்தில் இந்தியாவில் 40 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் நேற்று ரயில் பெட்டி பராமரிப்பு தொழிற்சாலைக்காண அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், மாநில ரயில்வே மந்திரி ஜல்னா, உதயநிதித்துறை இணை மந்திரி பகவத் காரத்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்  கூறியதாவது. 42 ரயில் நிலையங்களுக்கான டெண்டர் விடும் பணிகள் முடிவடைந்து விட்டது. மேலும் 32 ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 200 ரயில் நிலையங்களை சீரமைக்க அரசு பெரிய திட்டம் வகுத்துள்ளது. அந்த ரயில் நிலையங்களில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வசதி, காத்திருப்பு ஓய்வறை , உணவு விடுதிகள் உள்ளிட்ட உலக தரம் வாய்ந்த வசதிகளுடன் அந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் 40 வந்தே பாரத் ரயில்கள் எதிர்காலத்தில் இருக்கும். அவற்றில் 100  ரயில்கள் மராத்வாடாவின் லத்தூரில் உள்ள பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்படும். மேலும் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நெடுஞ்சாலைகள் அல்லது ரயில்வே மூலம் இணைக்கப்பட்டு வருகின்றது. மேலும் அவுரங்காபாத்தில் உள்ள ரயில் பெட்டி பராமரிப்பு வசதி 18 பெட்டிகள் திறன் கொண்டது எனக் கூறினார். இதனையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அம்பா தாஸ் தன்வே இந்த திறனை 24 பெட்டிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து அடுத்த 15 நாட்களில் முன்மொழிவை அனுப்பப்படும் என அறிவித்துள்ளார். அதன் பின்னர் பேசிய மாநில ரயில்வே மந்திரி ஜல்னா மராட்டிய மாநிலத்திற்கு 1,100 கோடி ரூபாயாக இருந்த நிதியை  மத்திய அரசு  11 கோடி ரூபாயாக   ஒதுக்கியுள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |