பிளாட்பாரம் டிக்கெட்டுகள் விற்பனை மீண்டும் தொடங்கியது. தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு முழுவதும் தொடர்ந்து வந்த போராட்டங்களால் ரெயில் நிலையங்களில் போலீசார் தரப்பில் பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தன. அதன் ஒரு பகுதியாக தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் கடந்த 20-ந்தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது.
பயணிகளின் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனால் ரெயில் டிக்கெட்டுகளை வைத்திருந்த நபர்கள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இன்று முதல் மீண்டும் சென்னை கோட்ட ரெயில் நிலையங்கள் அனைத்திலும், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.