கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்தததையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டதால் ரயில் சேவைகளும் வழக்கம்போல் தொடங்கியது. இந்நிலையில் அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை முதல் ஜனவரி 15 வரை ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து குருவாயூர், மதுரை, ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். மதுரை- சென்னை, எழும்பூர்-காரைக்குடி, தாம்பரம் -எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.