Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு….!! இனிமேல் டிக்கெட் எடுப்பது ரொம்ப சுலபம்….!! வெளியான சூப்பர் அறிவிப்பு….!!

ரயில் நிலையங்களில் போன்பே, ஜிபே மற்றும் பேடிஎம் போன்றவை வழியாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது , மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரம் ஏற்கனவே அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தில் ஜிபே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பதற்கு கூட இதுபோன்ற க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்வதின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். அதோடு இந்த வசதியின் மூலம் சீசன் டிக்கெட்டை புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |