Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…. ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. புதிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்களின் வசதிக்காக சென்னை- திருப்பதி இடையே விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் அனைத்து ரயில் போக்குவரத்தும் தொடங்கியது.

இதேபோல் சென்னை- திருப்பதி இடையேயும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சென்னை சென்டிரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் 2 விரைவு ரயில்கள் (வண்டி எண் 16057/58, 16053/54) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 5 பொது பெட்டிகள் தற்போது முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட 2 விரைவு ரயில்கள் வருகிற 17-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை- திருப்பதி இடையேயான இந்த ரயில் சேவை வருகிற 18-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை- திருப்பதி இடையே இரு மார்க்கத்திலும் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |