மீனாட்சிபுரம் ரயில் பாதை, ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அந்த வழியாக செல்கின்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி – பாலக்காடு வழிதடத்தில் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கின்ற ரயில் பாதை, ரயில்வே கேட்டுகளில் ரயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது. அதனால் பொள்ளாச்சி அடுத்துள்ள அம்பராம்பாளையம் சுங்கத்திலிருந்து ஆனைமலை செல்லும் சாலையில் சுப்பே கவுண்டன்புதூர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ரெயில்வே கேட் நாளை மறுநாள் (திங்கள்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்பட உள்ளது. எனவே அந்த வழியாக செல்கின்ற வாகனங்கள், பொதுமக்கள் சுப்பே கவுண்டன்புதூர் ரயில்வே பாலம் சுந்திரிபுரி வழி மாற்றுப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இதேபோன்று பெரியபோது சாலையில் உள்ள ரயில்வே கேட் வருகின்ற 17-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்பட உள்ளது. எனவே அந்த வழியாகச் சென்ற வாகனங்கள், பொதுமக்கள் சத்தி சோயாஸ் வழைக் கொம்பு வழிப்பாதையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் மீனாட்சிபுரம் பிரிவு ரயில்வே கேட் வருகின்ற 18ஆம் தேதி அடைக்கப்பட உள்ளது. எனவே அந்த வழியாகச் செல்கின்ற வாகனங்கள், பொதுமக்கள் கணபதிபாளையம் பெரியகோட்டை பாதையில் செல்ல வேண்டும்.
இதனையடுத்து மீனாட்சிபுரம் ரயில்வே நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் வருகின்ற 19-ம் தேதி அடைக்கப்பட உள்ளது. அந்த வழியாகச் செல்கின்ற வாகனங்கள், பொதுமக்கள் கோவிந்தாபுரம் பெரியபோது சாலை மாற்று வழிப் பாதையில் செல்லவேண்டும். இத்தகவலை ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தெரிவித்தார்கள்.