ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விட்டு சுற்றுலா தலத்தை மேம்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ரயில்வே துறைக்கு சொந்தமான ரயில் பெட்டிகளை தனியார் நிறுவனங்களிடம் விற்பனை செய்வதற்கும், குத்தகை விடுவதற்கும் ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள தரப்பினரின் விருப்பத்திற்கு ஏற்றார்போல் ரயில் பெட்டிகள் குத்தகைக்கு விடப்படும். காலியான பெட்டிகளையும் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். குத்தகைக்கு எடுக்கப்படும் ரயில் பெட்டிகளில் சிறிய அளவில் மாற்றங்கள் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 ஆண்டு காலத்துக்கு ரயில் பெட்டிகளை குத்தகைக்கு நம்மால் எடுத்துக்கொள்ள முடியும். அவற்றை பெட்டிகளின் ஆயுட்காலம் வரை நீட்டிக்க முடியும்.
16 பெட்டிகளுடன் கூடிய ரயிலை மட்டுமே விலைக்கு வாங்கவோ அல்லது குத்தகைக்கு பெறவோ முடியும். ஆர்வமுள்ளவர்கள் தகுதி அடிப்படையில் பதிவு முறை மற்றும் குத்தகை கட்டணம் உள்ளிட்ட நியாயமான கட்டணங்களை ரயில்வே விதிக்கும். சரியான நேரத்தில் செயல்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ரயில் பெட்டிகளுக்குள் விளம்பரம் செய்யவும், பிராண்ட் பெயர்களை வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் திட்டத்திற்கான கொள்கைகள், விதிமுறைகள், நிபந்தனைகளை ஆகியவற்றை உருவாக்க நிர்வாக இயக்குனர் குழுவை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது.