ரயில் பெட்டியில் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாதானபுரம் நேதாஜி காலனியில் சாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் லட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வெளியே சென்ற சாமிநாதன் வீட்டிற்கு திரும்பி வராததால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர் அப்போது கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 2-வது நடை மேடையில் நிறுத்தப்பட்டிருந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் வெளிப்புற ஜன்னல் கம்பியில் சுவாமிநாதன் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாமிநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது நேற்று முன்தினம் ரயில் நிலையத்திற்கு வந்த சாமிநாதன் ரயில் ஜன்னல் கம்பியின் வெளிப்புறமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.