சதாப்தி விரைவு ரயிலில் மீண்டும் புகை வர தொடங்கியதால் ரயில்வே துறை அலுவலர்கள் அந்த பெட்டியை அவசரஅவசரமாக கழட்டி விட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் ரயில் நிலையத்தில் லக்னோ செல்லும் சதாப்தி விரைவு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அதில் இருந்து கரும்புகை வருவதை தொடர்ந்து பயணிகள் ரயில்வேக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீயை அணைக்க முயற்சித்தனர்.
தலைமை தீயணைப்பு அலுவலர்கள் சுனில் குமார் கூறுகையில் ரயிலின் ஜெனரேட்டர் கார் பெட்டியிலிருந்து தீ ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த தீ பரவுவது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ரயிலிலிருந்து தீ விபத்து ஏற்பட்ட பெட்டிகள் கழட்டி விடப்பட்டனர். இதில் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக மார்ச் 13ம் தேதி ரயில் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.