உலகின் பாதுகாப்பான போக்குவரத்து முறையாக மறுக்கப்படும் ரயில் போக்குவரத்து, உலகின் பல இடங்களில் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக ரயில் செயல்பட்டு வருகிறது. ரயில் பயணத்தில் கட்டணம் குறைவு மற்றும் பயண நேரம் குறைவு என்பதால் லட்சக்கணக்கானவர்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ரயிலில் உணவு, தேநீர் போன்ற வசதிகள் உள்ளன. அதனைத் தொடர்ந்து இரயில்களில் நிறைய பேருக்கு கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பது இல்லை. ஏனென்றால் பயணம் செய்வதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே புக்கிங் செய்வார்கள். ஆனால் அதற்கு முன்னரே ரயில் பெட்டிகள் நிரம்பி விடுகின்றன. மேலும் ரயிலில் பயணம் செய்ய நினைக்கும் பெரும்பாலனவர்கள் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து ரயில் பெட்டிகளில் நாம் விரும்பிய இருக்கை நம்மால் முன்பதிவு செய்ய முடியாது. பேருந்துகளில் பயணம் செய்வதாக இருந்தால் நீங்கள் விரும்பிய சீட்டை புக்கிங் செய்யலாம். ஒரு பேருந்தில் சீட் இல்லை என்றாலும் இன்னொரு பேருந்தில் புக்கிங் செய்து கொள்ளலாம். ரயிலில் இவ்வாறு விரும்பிய சீட்டை முன்பதிவு செய்ய முடியாது. ஏனென்றால் இதன் பின்னால் ஒரு அறிவியல் இருக்கிறது. அதாவது ரயில்கள் இஞ்சின்களுடன் இணைக்கப்பட்ட வரிசையான பெட்டிகளை கொண்டு ஒரு பெட்டியுடன் மற்றொரு பெற்று இணைக்கப்பட்ட அதிகமான நீளத்தைக் கொண்டிருக்கும். இதில் புவியீர்ப்பு மையப்புள்ளி என்பது மிக முக்கியமானதாகும். ரயிலின் இடையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட அது புவியீர்ப்பு மையப்புள்ளி மாறி விபத்துக்கு உள்ளாகும்.
அதனால் தான் IRCTC இணைய தளம் தானாகவே ரயில் டிக்கெட் புக் செய்யும் முறையை வைத்து இருக்கிறார்கள். அதாவது ஒரு ரயிலில் முன்பதிவு தொடங்கிவிட்டது. பொதுவாக முன்பதிவு செய்யப்படும் ரயில்களில் S1 முதல் S12 வரை ஸ்லீப்பர் கிளாஸ் மற்றும் ஏ சி கிளாஸ், முன்பதிவு இல்லாத பெட்டிகள் ஆகியவை இருக்கும். IRCTC தளம் ரயிலுக்கான முன்பதிவு முதலில் துவங்கும்போது ரயிலுக்கான மையத்தில் இருக்கும் பெட்டியில், அதாவது 12 பெட்டிகள் இருக்கும் ரயிலில் 6 வது பெட்டியிலிருந்து முன்பதிவு செய்ய தொடங்கும். இந்த அறிவியலின் அடிப்படையில் தான் ரயில் பெட்டிகளில் இருக்கைகள் முன் பதிவு செய்யப்படுகின்றன. இதனால் தான் ரயில் விபத்தில் சிக்குவது தவிர்க்க முடியும். இதன் காரணமாகவே பயணிகளுக்கான சீட்டை தாங்களே தேர்வு செய்யும் வசதியே வழங்கவில்லை.