Categories
தேசிய செய்திகள்

ரயில் முன் பாய்ந்து உயிரை விட்டகள்ளக் காதல் ஜோடி…. வெளியான அதிர்ச்சி காரணம்?….!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிஜி (38) மற்றும் சிவதாசன் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி மனைவியை காணவில்லை என்று சிவதாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிவதாசன் மனைவியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் போலீசாருக்கு கொயிலாண்டி ரயில் நிலையம் அருகே பெண் மற்றும் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் உயிரிழந்தது காணாமல் போனதாக அறியப்பட்ட சிவதாசனின் மனைவி என தெரியவந்தது. மேலும் அவருடன் இருந்த நபர் முச்சு குன்னுவை சேர்ந்த ரனிஷ் (34) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிவதாசன் மனைவிக்கும் ரனிஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று எண்ணி வீட்டை விட்டு வெளியேறி கணவன் மனைவி போர்வையில் தனியாக குடும்பமே நடத்தி வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில் தங்களது வீட்டிற்கு தெரிந்து பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |