Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரயில் மோதி கட்டிட தொழிலாளி பலி…. மது போதையில் தண்டவாளத்தை கடந்தாரா….? போலீஸ் விசாரணை….!!

குழித்துறை ரெயில் நிலையத்தில் மது அருந்தி விட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற கட்டிடதொழிலாளி  பலி.

கன்னியாகுமரி  மாவட்டத்தில்  அருவிக்கரை அருகே  உள்ள மாத்தூர் பகுதியில்  வசித்து  வருபவர்  சுஜர்சிங் (வயது 45).   இவருக்கு பிந்து என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும்  உள்ளனர்.  இவர் கேரள மாநிலம் திருவல்லாவில் தங்கி கட்டிட வேலை  பார்த்து  வந்துள்ளார். வாரத்தின் இறுதி நாட்களில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த சுஜர்சிங் கடந்த 26ஆம் தேதி தனது நண்பர்களுடன் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயிலில்  இரவு 9.30 மணிக்கு குழித்துறை ரயில் நிலையம்  வந்து  இறங்கியுள்ளார்.

பின்னர் நண்பர்கள் அனைவரும் புறப்பட்டு விட  சுஜர்சிங் மட்டும் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார்.  அப்போது புனலூரில் இருந்து மதுரை நோக்கி வந்த ரயில்   மோதி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை  அக்கம்பக்கத்தினர்  நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல்  தெரிவிக்க  விரைந்து  வந்த அவர்கள்  இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சுஜர்சிங் வைத்திருந்த பையில் மது பாட்டில்கள் இருந்ததால் அவர் மது அருந்திவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |