வாணியம்பாடி அருகே ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் தேவசாணம் அழிஞ்சிகுளத்தை சேர்ந்தவர் 26 வயதான மாதவன். இவர் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் டைலர் கடை வைத்து தையல் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க வாணியம்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மாதவன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இத்தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாதவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.