Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரயில் மோதி விபத்து…! ”பராமரிப்பு ஊழியர் மரணம்” போலீசார் விசாரணை …!!

உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ரயில்வே கேங்மேன் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழநதார். இது குறித்து தகவலறிந்ததும் விருத்தாசலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |