ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளி வென்ற ரவிக்குமார் மற்றும் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா ஆகியோருக்கு ரெனால்ட் நிறுவனம் கைகர் கார் பரிசளித்துள்ளது. அதன்படி ரூ.10,00,000 மதிப்புள்ள இந்த வாகனத்தை இதற்கு முன் குத்துச்சண்டை வீராங்கனை மீராபாய் மற்றும் லவ்லினா ஆகியோருக்கும் பரிசு அளித்தது குறிப்பிடத்தக்கது.