ரவீந்தர் குறித்து பேட்டி ஒன்றில் வனிதா பேசியது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் இணையத்தில் இவர்களை ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட பொழுது பீட்டரின் முதல் மனைவி பிரச்சனை செய்தார். அவருக்கு ஆதரவாக வனிதா உடன் மோதினார் ரவீந்தர். தற்பொழுது ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்த வனிதா பதிவு ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். அதற்கு பதில் அளித்த ரவீந்தர் கூறியதாவது, என் வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில் வனிதா தற்பொழுது அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, எல்லாம் பிளான் பண்ணி…. ஸ்டண்ட் கிரியேட் பண்ணி…. மொத்தமாக காலி பண்ணிட்டாங்க. Mind your own business. நான் அவருக்கு அப்போதே அட்வைஸ் செய்தேன். அவருடன் சண்டை எல்லாம் இல்லை. அதன் பிறகு பேசி உள்ளேன். ரவீந்தர் உன்னுடைய மாஸ்டர் பிளான் என்னவென்று எனக்கு தெரியும். என்கிட்ட வெச்சிக்காத என்ன கூறியதையடுத்து நீங்க எதுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க. கமெண்ட் எல்லாம் Disable பண்ணிட்டு போய் வாழ்க்கையை பாருங்கள். அந்த ட்விட்டை நான் பொதுவாக தான் போட்டேன். ரவி நல்லா இரு என அந்த பேட்டியில் வனிதா கூறியுள்ளார்.