Categories
அரசியல்

“ரவீந்தரநாத் தாகூரால் பெயர் சூட்டப்பட்டவர்” நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை…. இதோ சில தகவல்கள்….!!!!

சிறந்த பொருளாதார வல்லுனரான அமர்த்தியா சென் மேற்கு வங்கத்தில் உள்ள சாந்தி நிகேதனில்  கடந்த 1933-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி பிறந்தார். இவருக்கு அமர்த்தியா சென் என்ற பெயரை ரவீந்திரநாத் தாகூர் சூட்டினார். இதில் அமர்த்தியா என்பதற்கு இறவாத என்பது பொருளாகும். இவர் பொருளாதாரம் மற்றும் கணிதத்தில் பி.ஏ பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். இவர் கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

இவர் identity and violence, The argumentative Indian, rationality and freedom, development as freedom, reason before identity, the quality of life, inequality Reexamined, more than hundred million women are missing, hunger and public action, On Ethics and economics, food economic and entitlements, Choice welfare and measurement, poverty and femines, on economic in quality போன்ற நூல்களை எழுதியுள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த நோபல் பரிசு மூலமாக கிடைத்த பணத்தை பிரதிச்சி என்ற அமைப்பை தொடங்கி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக செலவு செய்தார்.

இதனையடுத்து கடந்த 1999-ம் ஆண்டு மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கி சிறப்பித்தது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டின் வளர்ச்சியை பொறுத்து மட்டும் அல்ல என்றும், வறுமையில் வாடும் மக்களின் பசியை முழுமையாக போக்குவதே உண்மையான பொருளாதார வளர்ச்சி என்றும் கூறினார். இவர் ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக பல்வேறு கோட்பாடுகளை வகுத்துள்ளார்.

மேலும் கல்வி மற்றும் ஜனநாயகம் மட்டுமே மனித குலத்தை மேம்படுத்தும் என்ற ஆழமான கருத்தை மக்களிடையே பதிவு செய்த பெருமை அமர்த்தியா சென்னுக்கு உண்டு. இவரை பாராட்டுவதற்கு வார்த்தைகளை இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் பொருளாதார துறையில் பல்வேறு சிறந்த கருத்துக்களை கொண்டு வந்து தத்துவ மேதை ஆகவே திகழ்கிறார் அமர்த்தியா சென்.

Categories

Tech |