ரவீந்தர் பகிர்ந்த வீடியோவையும் அதற்கான கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர்.
விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் இருவரையும் இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். இந்த நிலையில் தனது இணையதள பக்கத்தில் ரவீந்தர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் .அதில்அவர் ஹோட்டல் ஒன்றில் எரியும் உணவு ஒன்றை வெயிட்டர் வாயில் வைக்க அப்படியே முழுங்குகின்றார். மேலும் அதற்கு பார்த்து வயிறு எரிய போகுது!!! வெளியே இருக்கிற வயித்தெரிச்சலா விடவா? என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி உள்ளனர். உலகத்தில் இல்லாத பெண்ணையா திருமணம் செய்து கொண்டீர்கள்? ஓவராகத்தான் பேசுகின்றீர்கள் என விளாசி வருகின்றார்கள்.
https://www.instagram.com/p/CiM-epyoDxz/?utm_source=ig_embed&ig_rid=4cff701a-7c79-4fd6-a0b6-1a07f07a66a2