நடிகர் விஷால் ரவுடிகளிடம் அடி வாங்கும் படப்பிடிப்பு வீடியோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் எனிமி, துப்பறிவாளன்-2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. மேலும் விஷாலின் 31-வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
Experience the power-loaded action from the sets of #Vishal31
Link – https://t.co/P6opotFlFs#NotACommonMan pic.twitter.com/JjawmPbueA
— Vishal Film Factory (@VffVishal) June 16, 2021
தற்போது தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் ‘விஷால் 31’ படக்குழுவினர் ஹைதராபாதில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் ரவுடிகளிடம் அடிவாங்கும் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.