ரவுடிகளை வைத்து பாஜக மிரட்டும் சூழிநிலையில் உள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
ரவுடிகள் மற்றும் குண்டர்களை வைத்து மிரட்டும் சூழ்நிலையில் பாஜக உள்ளது. தேடப்படும் குற்றவாளியான எழிலரசி, பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ள புதிய முதல்வர் நாராயணசாமி, தமிழகம், கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் மருத்துவ படிப்பில் 50 சதவீத இடங்கள் மாநில ஒதுக்கீடாக இருக்கும்பொழுது புதுச்சேரிக்கு மட்டும் ஏன் வழங்குவது இல்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.