பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது வரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர். இதனால் தற்போது 14 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த வாரம் பழங்குடியினருக்கும், ஏலியன்களுக்கும் இடையில் வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று வெளியான 2வது புரோமோவில் பழங்குடியினரான அசீம், ஏலியன் அணியிலுள்ள அமுதவாணனிடம் சண்டை போடுகிறார். அவற்றில், ஏன் நீங்க இவ்ளோ அசிங்கமா, சீப்பா கேம் விளையாடுறீங்க. அவங்க கேவலமானவங்க நம்ம அப்படி இல்ல என அசீம் கூறுகிறார். அதற்கு நீங்க ரவுடிதனம் பண்றீங்க என அமுதவாணனும், விக்ரமனும் கோபமாக கூறுகின்றனர். இத்துடன் இந்த புரோமோ முடிவடைகிறது.