Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரவுடியை நம்பி ஏமார்ந்த “பள்ளி மாணவிகள்”…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

பள்ளி மாணவிகளை கடத்தி சென்ற ரவுடியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குட்டக்குழி காலணியில் பிளம்பரான வினு(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று வந்த இடத்தில் வினுவுக்கும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த மாணவி மூலம் திருவட்டார் பகுதியில் வசிக்கும் மற்றொரு 12-ஆம் வகுப்பு மாணவி அறிமுகமானார். இரண்டு மாணவிகளுடனும் வினு நெருக்கமாக பழகியதோடு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி இரண்டு மாணவிகளும் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்ற வினு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சிறிய வீடு எடுத்து இரண்டு மாணவிகளுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் வினுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது மூன்று பேரும் ஜாலியாக ஊர் சுற்றலாம் என ஆசை வார்த்தைகள் கூறி வினு மாணவிகளை அழைத்துள்ளார். ஒரு மாணவி வீட்டில் இருந்த தங்க சங்கிலியை எடுத்து வந்த பிறகு மூன்று பேரும் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அந்த தங்க சங்கிலியை 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து செலவழித்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து சென்னைக்கு வந்து பல்வேறு இடங்களில் சுற்றி தெரிந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலீசார் இரண்டு மாணவிகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |