மருத்துவ கழிவு பொருட்களை கொட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரபேரி பகுதியில் சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டி செல்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவ கழிவு பொருட்களை சிலர் கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் ஏற்றி வந்து சிங்கரப்பேரி கிராமத்தில் கொட்டி செல்வது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய வீரசிகாமணி பகுதியில் வசிக்கும் ரவுடியான வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான லாரி ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.