‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து பெற்றுள்ளனர்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் . ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது . இதையடுத்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ஒரு படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
There r moments in life, wer u feel #WhatGoesAroundComesAround @arunmatheswaran my dear friend for a long time,started together as ADs & now to see our names together in ur first film makes me feel happy:)
Nayan &Me want to present this special film to ya'll #RowdyAquiresRocky pic.twitter.com/Hs5rfoWUsx
— VigneshShivan (@VigneshShivN) December 9, 2020
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய ‘ராக்கி’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இணைந்து பெற்றுள்ளனர் . இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் ‘பல ஆண்டுகளாக எனது நண்பர் அருண் மாதேஸ்வரனும் நானும் உதவி இயக்குனராக பணிபுரிந்தோம். தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நயனும் நானும் இணைந்து இந்த சிறப்பு படத்தை வெளியிடுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார் .