பிரபல நாடு பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
ரஷியா உக்ரைன் மீது கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகிறது. ஆனாலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடன் இணைத்துக் கொண்டது. தற்போது உக்ரைன் ரஷியா கைப்பற்றிய பகுதிகளை மீட்டு வருகிறது.
மேலும் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ரஷியா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ரஷிய ராணுவம் உக்ரைனின் பொதுமக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள், மின் கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.