Categories
உலக செய்திகள்

ரஷியா -துருக்கி அதிபர்கள் சந்திப்பு…. உள்நாட்டு போர் குறித்து ஆலோசனை….!!

துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்தனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போரானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் சிரிய அரசு படைகளானது கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை பிடிக்க தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் அவ்வப்பொழுது துருக்கி மற்றும் ரஷ்யாவின் இடையே மோதல்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.

மேலும் அமெரிக்காவின்  எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடமிருந்து துருக்கியானது எஸ்-400 ரக ஏவுகணையை  ஏற்றுமதி செய்துள்ளது. எனவே அமெரிக்கா துருக்கியின் மீது பொருளாதாரத் தடை விதிக்க உள்ளதாகக் கூறியுள்ளது. இதனை அடுத்து நேற்று துருக்கி அதிபர் எர்டோகனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ரஷியாவில் சந்துதித்து பேசினர். அதில் சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருதல் மற்றும் எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

Categories

Tech |