Categories
உலக செய்திகள்

ரஷிய துருப்புகளின் காட்டுமிராண்டித்தனம்…. 570 சுகாதார மையங்கள், 101 மருத்துவமனைகள் அழிப்பு…. உக்ரைன் அதிபரின் ஆதங்கம்….!!

உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளதாகவும், ரஷியாவின் இந்த செயல் முட்டாள்தனமானது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். 
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் கிழக்கு பிராந்தியமான டான்பாசில் ரஷ்ய தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல்  உக்ரைனில்  570 சுகாதார மையங்களை ரஷிய துருப்புகள் அழித்துள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைனில் பள்ளிகள் மற்றும் சுகாதார மையங்களை குறிவைத்து ரஷிய துருப்புகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.  இதனை அடுத்து பிப்ரவரி 24-ல் படையெடுப்பு தொடங்கியது முதல் 570 சுகாதார மையங்களும், 101 மருத்துவமனைகளும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ரஷ்யாவின் இந்த செயலானது முட்டாள்தனம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |