போப் பிரான்சிஸ், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல் மிருகத் தனமானது என்று கூறியிருக்கிறார்.
உக்ரைன் நாடு ரஷ்ய போரால் கடும் விளைவுகள் மற்றும் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அங்கு ஆயுத தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பதில் தாக்குதல் நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
எனவே, அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வீரர்கள் உயிரிழந்து கொண்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி மூத்த உதவியாளர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் போப் பிரான்சிஸ், ரஷ்யா நடத்தும் போர் குறித்து கூறியதாவது, ரஷ்யப் படையினர் மிருகத்தனமானவர்கள். அவர்கள் கொடூரமாகவும் நடந்துகொள்கிறார்கள். அவர்களை யாரேனும் உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொள்ள தூண்டிவிட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்.