Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் குண்டுவீச்சு தாக்குதலில் 2 பேர் காயம்…. குடியிருப்பு கட்டிடங்கள் சேதம்…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 133வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யப்படைகள் பெச்செனிஹி கிராமத்தின் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஒருகுழந்தை மற்றும் 64 வயதான நபர் காயமடைந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கார்கிவ் ஒப்லாஸ்ட் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |