உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருப்பதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் கோபமடைந்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்த நாடு மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். அதேபோல் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை படிப்படியாக நிறுத்திக்கொள்ள மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு இருக்கின்றது.
இந்தநிலையில் எங்களிடமிருந்து எரிபொருள் வாங்குவது நிறுத்தினால் பொருளாதாரத்தில் கடும் எதிர்மறை தாக்கம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது புதின் கூறுகையில், ரஷ்ய எரிவாயு பதிலாக மாற்று வழிகளை முயற்சிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் வேதனை ஏற்படும் எனவும் ஐரோப்பாவுக்கு தற்போதைய நியாயமான மாற்றம் எதுவும் இல்லை. மேலும் ஐரோப்பாவுக்கு பிற நாடுகளில் இருந்து கொள்முதல் செய்து குறிப்பாக அமெரிக்காவில் இருந்து எரிவாயு அனுப்பபட்டால் அது நுகர்வோர்களுக்கு கடுமையான விலையேற்றத்தை கொடுக்கும்.
இதனால் மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படும், எனவும் ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு போட்டித்தன்மை பாதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியன் தங்களின் இயற்கை எரிவாயு 40% ரஷ்யாவை சார்ந்து இருக்கிறது. அதேபோல் எண்ணெய் தேவையை 25% ரஷ்யாவை பூர்த்தி செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.