Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து வாங்கும் நிலக்கரி நிறுத்தம்…. பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் எடுத்த திடீர் முடிவு….!!!!

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து வாங்கும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர். சென்ற பிப்ரவரி 24ம் தேதி துவங்கிய உக்ரைன் -ரஷ்யா போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல பொருளாதார நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

இதற்கு பதிலடி தரும் விதமாக ரஷ்யாவும் தங்களது நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதியை மிகவும் குறைவான அளவுக்கு குறைத்துள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா போன்றவை ரஷ்யாவிடம் இருந்து பெரும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தி இருக்கிறது. இதில் ஐரோப்பிய ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடையானது வருடத்திற்கு 8 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ரஷ்ய நிலக்கரி ஏற்றுமதியில் 25 % வரை பாதிக்கும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |