Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் வசமா சிக்கிய பிரித்தானியா வீரர்கள்…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யபடைகளிடம் 2 பிரித்தானியா வீரர்கள் பிடிபட்டது அந்நாட்டுக்கு உண்மையில் கடினமான பிரச்சனை என முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட Shaun Pinner, Aiden Aslin ஆகிய இருவர் ரஷ்யஅரசு டி.வி.யில் தோன்றினர். அப்போது தங்களுக்கு ஈடாக உக்ரைன் படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள ரஷ்ய ஆதரவு அரசியல்வாதி Viktor Medvedchuk-ஐ ரஷ்யாவிடம் கொடுத்து, தங்களை மீட்குமாறு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி Lord Ricketts கூறியிருப்பதாவது, இது பிரித்தானியா அரசாங்கத்திற்கு உண்மையில் கடினமான பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

உக்ரைனுக்கு போக வேண்டாம் மற்றும் எதாவது பிரச்சனையில் சிக்கினால் அரசாங்கத்தால் எந்த உதவியும் செய்ய முடியாது என பிரித்தானியர்களுக்கு கடும் அறிவுறுத்தப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இருந்தாலும் வற்புறுத்தலின் கீழ் பிரித்தானியர்கள் பேசுவதுபோல் தெரிகிறது. Medvedchuk-ஐ விடுதலை செய்ய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பிரத்தானிய அரசை அழுத்தம் கொடுக்கவைக்க இதனை ஒரு வசதியான வாய்ப்பாக  ரஷ்யா பயன்படுத்துகிறது. இது தொடர்பான விவாதங்கள் இப்போது நடைப்பெற்று வருகிறது. ஆனால் இறுதி முடிவு உக்ரைனிய அதிபரிடம் தான் இருக்கிறது என்று Lord Ricketts தெரிவித்துள்ளார்.

Categories

Tech |