Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் அடுத்த அட்டாக்!…. ஆடிப்போன உக்ரைன்…. 67வது நாளாக நீடிக்கும் போர்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது 67வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே பல்வேறு நாடுகளும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல முயற்சிகளை முன்னெடுத்தன. இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியை சந்தித்து வருகின்றன. அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ரஷ்யா, உக்ரைனின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான ஒடிசாவில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் மீது ராக்கெட் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனால் விமான ஓடுதளத்தில் ஓடு பாதை முழுவதும் ராக்கெட் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஒடிசா நகரிலிருந்து இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |