ரஷ்யாவில் தயாராகியுள்ள கொரோனா தடுப்பு ஊசி வரும் அக்டோபரில் பயன்பாட்டுக்கு வரும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் வெற்றி பெற்றதாக அன்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவின் கேமாலியா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின், அனைத்து மருத்துவ சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி மனிதர்களிடமும் பரிசோதிக்கப்பட்டு விட்டதாகவும் தடுப்பூசியை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கேமாலியா நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தை வரும் அக்டோபர் மாதத்தில் பொதுமக்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், ரஷ்யா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.