Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவிற்கான ஆதரவை தொடர்ந்து வழங்கும் பெலாரஸ்”…. ஆஸ்திரேலியாவின் அதிரடி நடவடிக்கை…!!!

ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 31வது நாளாக போர் தாக்குதலை  நடத்தி வருகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிற்கு வல்லரசு நாடு ஆரம்பத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டின் அதிபர் அலெக்சாண்டர்லு காஷென்கோவை சர்வதேச நாடுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவுக்கான ஆதரவை தொடர்ந்து வரும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது ஆஸ்திரேலியா பொருளாதார தடைகளை விதித்திருக்கிறது.

இதுபற்றி ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ மீது ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் அதேபோல் அவரது மனைவி கலினா லுகாஷென்கோ மற்றும் பெலாரஸ் அரசாங்கத்தின் மூத்த தேசிய பாதுகாப்பு பொறுப்புகளை வகித்து அவரது மகன்விக்டர் லுகாஷென்கோ மீதும் நாங்கள் தடைகளை விதித்திருக்கிறோம்” என கூறப்பட்டிருக்கிறது. இதுதவிர ரஷ்யாவை சேர்ந்த 26 தனிநபர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப் பட்டு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |