Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்குள் நுழைய பைடனுக்கு தடையா…..? அதிரடியில் ரஷ்ய அதிபர்….!!

ரஷ்யாவில் நுழைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி மற்றும் மகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்  அமெரிக்கர்களுக்கு ரஷியாவும் பொருளாதார தடை விதித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் மகள் ஆஷ்லே போன்ற 25 பேர் ரஷ்யாவில் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டு அதிபர் புதின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதில்  குடியரசு கட்சி எம்.பி.க்கள் மிட்ச் மேக்கனல், சூசன் காலின்ஸ், பென் சாசே, ஜனநாயக கட்சி எம்.பி. மற்றும் கிறிஸ்டின் ஜில்லிபிராண்ட் போன்றவர்களுக்கும் ரஷியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |