ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்களிப்பில் பங்கேற்காமல் இந்தியா,பாகிஸ்தான் போன்ற 12 நாடுகள் தவிர்த்துவிட்டது.
ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற 12 நாடுகள் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டன. இதனை அடுத்து 33 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. மேலும் சீனா உள்ளிட்ட 2 நாடுகள் மட்டும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இது தொடர்பான விவாதங்களில் பங்கேற்றுள்ள இந்தியா உக்ரைனில் நடைபெறும் தாக்குதல்களை நிறுத்தி அமைதியை நிலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது.