ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்து உள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கி ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்துள்ளது.
ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பிற்கு தேவையான பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களையும் அதேபோல் அந்த நாட்டின் விமான மற்றும் விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் தொழில் நுட்பங்களையும் ஏற்றுமதி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.