Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்…. எச்சரிக்கும் பிரபலநாடு….!!!

பிரிட்டன் அரசு அந்நாட்டு மக்கள்  யாரும் ரஷ்யாவிற்கு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்கிரன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நாட்டை காப்பாற்ற முனைப்பில் உள்ள உக்ரைன் படைகளை  முன்னேற விடாமல் ரஷ்யா   தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இதில் ஏராளமான உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர்.

ரஷ்ய விமானங்கள் தங்கள் வான் வெளியில் வரக்கூடாது என பல நாடுகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர் . இதனையடுத்து ரஷ்ய விமானங்களுக்கு  பல்வேறு நாடுகள் தடை விதிப்பதற்கு பதிலடி ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட 36 நாடுகளின்  விமானங்கள் ரஷ்ய வான்வெளியை பயன்படுத்த புதின்  தடை விதித்துள்ளார். இந்நிலையில் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது  யாரும் ரஷ்யாவிற்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |