ரஷ்யாவில் இருந்து அனைத்து இறக்குமதிகளையும் தடை செய்யப் போவதாக உக்ரைன் அரசு அறிவித்திருக்கிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ரஷ்ய கூட்டமைப்பின் எந்த ஒரு தயாரிப்பையும் இனி இறக்குமதி செய்யப்போவதில்லை என அந்த மாநில பொருளாதார துறை அமைச்சர் கூறியுள்ளார். பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று தொடங்கிய உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பின் இரு நாடுகளுக்கு இடையே சரக்கு சேவை மறைமுகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இறக்குமதியை முற்றிலும் ரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர். தாக்குதல் சம்பவத்தின் முன்னதாக ரஷ்யாவுக்கும்,உக்ரைனுக்கும் இடையே 600 கோடி ரூபாய் அளவிற்கு இறக்குமதி சேவை இருந்து வந்துள்ளது.