ரஷ்யாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதன்படி ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,982 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14,15,316 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,366 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது வரை 10,75,904 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,15,046 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.