ரஷியாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
ரஷ்யாவின் செர்பியா மாகாணத்திலுள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி நிறுவனமொன்றில் 280க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுரங்கத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் இந்த இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் இறங்கினர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கையால் 276 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 75 பேரின் கதி என்ன என்று தெரியாத நிலை உள்ளது. ஏற்கனவே விபத்து ஏற்பட்டு பல மணி நேரம் ஆனதால் 75 பேரில் பலர் உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.