Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் தாயே மகனை பெட்ரோல் ஊற்றி தீவைத்த கொடூரச்செயல் ..!!காரணம் என்ன ?போலீசாரால் கைது .!!

ரஷ்யாவை சேர்ந்த பெண்  ஒருவரை  பார்ப்பதற்கு அவரது காதலன் வந்ததை அப்பெண்ணின் மகன் தகப்பனிடம் சொன்னதால் தாய் மகனையே கொடூரமாக தீவைத்து எரித்துள்ளார்.

ரஷ்ய வங்கி ஒன்றில்  காசாளராக பணிபுரிந்து வருகிற 31 வயதான அனஸ்தசியா பவுலினா அவரின் மகனான ஆண்ட்ரே தாயைப் பார்க்க அவரது காதலர் வந்ததே 35 வயதான பவெல் பவுலின்னான என்ற தனது  அப்பாவிடம் கூறியுள்ளான். இதனால் பவெல்லுக்கும் அனஸ்தசியாவிற்கும்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரமடைந்த அனஸ்தசியா இறக்கமேயில்லாமல் தனது மகனான ஆண்ட்ரேவின் வாயிலும் ,உடம்பிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தை கண்ட ஆண்ட்ரேவின் அக்காவான 12 வயது நட்டாஷா பயந்து அலறிக் கொண்டு தந்தையிடம் கூறியுள்ளார்.

உடனே பவெல்லும் வந்து தீயை அணைப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.ஆனால் அதற்குள் ஆண்ட்ரேவின் உடலில் பெரும்பகுதி எரிந்து விட்டது.உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் உடனே அனஸ்தசியாவை கைது செய்யதனர்.மேலும்  அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |