ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரஷ்ய கப்பல்கள் தங்கள் துறைமுகங்களுக்கு வர இத்தாலி அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வந்திருக்கின்ற நிலையில், ஏற்கனவே துறைமுகங்களில் உள்ள ரஷ்ய கப்பல்கள் உடனடியாக புறப்பட்டு செல்ல உத்தரவிடப்பட்டு இருக்கிறது. அதேபோல் தங்கள் நாட்டில் கருங்கடலில் துறைமுகங்களுக்கு ரஷ்யாவில் பதிவு செய்த அனைத்து கப்பல்களும் வரக்கூடாது என பல்கேரியா அரசு அறிவித்திருக்கிறது.
மேலும் மனிதாபிமான உதவியை நாடும் கப்பல்கள் அல்லது எரிபொருட்கள், உணவு மற்றும் மருந்துகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு மட்டுமே இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கபடுவதாகவும் பல்கேரியா குறிப்பிட்டு கூறியுள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 50 ஆவது நாளைக் கடந்து இருக்கின்ற நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பல்கேரியா, இத்தாலி போன்றவை ரஷ்யா மீது பொருளாதார தடை போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.