ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்த பட்டதால், தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,20,310 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 110 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 17,759 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 8.38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.