Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்குள்  நுழைய முயன்தாக…. அதிரடியில் வீரர்கள் …. உக்ரைனில்….!!!

உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள்  நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இரு நாட்டிற்கும்  இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து  உக்ரைன் மீது படை எடுப்பதற்காகவே ரஷ்யா தங்களது வீரர்களை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ளது என்று அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வருகின்றனர்.

ஆனால் ரஷ்யா இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதலை நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்குள்  நுழைய முயன்ற 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என ரஷ்ய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |