உக்ரைன் நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து ஆறு மாதங்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நேரிடையாக களமிறங்கியுள்ளது. எனினும் நோட்டாவில் உக்ரைன் உறுப்பினர் அல்லாத சூழலில் படைகளை இறக்க முடியவில்லை. ஆனால் ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வழங்குவதற்கான மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடைகளை கண்டுகொள்ளாமல் ரஷ்யாவும் போரில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் இந்தியா போன்ற நாடுகள் இருதரப்பு தூதரக பேச்சுவார்த்தை வழியே தீர்வு காண முன்வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் போருக்கு ஆதரவு தெரிவிக்காத வகையில் இருபுறமும் சாராமல் தொடர்ந்து நடுநிலைப் போக்கே கடைபிடித்தனர் பாகிஸ்தான் நாடும் நடுநிலை வகுத்து வருகிறது என கூறப்பட்டிருந்த நிலையில் உக்ரைன் நாட்டு போருக்கு உதவியாக ஆயுதங்கள் மற்றும் வெளிப்பொருட்களை வழங்கி இருக்கிறது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஐரோப்பாவை சேர்ந்த ஜியோ பொலிடிக் என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதன்படி பாகிஸ்தானில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் போன்றவை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த நாட்டின் இஸ்லாமாபாத் நகரை அடிப்படையாகக் கொண்ட டி எம் ஐ அசோசியேட்ஸ் என்னும் ஆயுத விற்பனை நிறுவனம் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த டிபன்ஸ் இண்டஸ்ட்ரி குரூப் எனும் நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து உக்ரைனிய அரசுக்கு தேவையான ஆயுதங்களை விநியோகம் செய்து வந்திருக்கிறது. இதே போல் உக்ரேனின் ராணுவ அமைச்சகம் சார்பில் சுலைவேக்கியா நாட்டை அடிப்படையாகக் கொண்ட கெமிக்க என்னும் பாதுகாப்பு நிறுவனமானது பாகிஸ்தானின் பாதுகாப்பு தளவாடத் தொழிற்சாலைகளுக்கு ஆயுத விற்பனையாளரான கெஸ்டிரால் என்ற நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு ஆயுத விநியோகம் நடைபெற்றுள்ளது என கூறப்பட்டிருக்கிறது. இதற்கு தகுந்தார் போல் கெஸ்டிரால் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லியாகத் அலி பெக் உக்ரைனுக்கு அடுத்து உள்ள போலந்து ருமேனியா மற்றும் சுளைவேக்கியா போன்ற நாடுகளுக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் பயணம் மேற்கொண்டார் எனவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.