ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “ஒட்டுமொத்த உக்ரைனையும் ரஷ்யாவால் தனது கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
எனவே தெற்கு, கிழக்கு பகுதிகளில் ரஷ்யா தனது இலக்கை நிர்ணயித்துள்ளது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா மீது அதிகப்படியான தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், உக்ரைனுக்கு உதவும் வகையில் அதிநவீன ஆயுதங்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் ரஷ்ய அதிபர் புடின் மீது போர்க்குற்ற விசாரணையை தொடங்க ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.